×

மகரத்திலிருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா

குளித்தலை, டிச.21: திருக்கணித பஞ்சாங்கபடி சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 5.32 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதில் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் கடகம், சிம்மம் விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ராசிகளாகும். இந்த சனி பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று மாலை கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரருருக்கு பால், தயிர், நெய் , இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. மலர் அலங்காரத்தில் சனிபகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானனோர் கலந்து கொண்டு சனி ஈஸ்வர பகவானுக்கு பரிகார பூஜைகள் செய்து வேண்டுதலை நிறைவேற்றி சனிஸ்வரரை வணங்கினர்.

The post மகரத்திலிருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா appeared first on Dinakaran.

Tags : Makar ,Kumbarasi ,Saturn ,Kadambavaneswarar temple ,Khuthalai ,Kulithalai ,Tirukkanith Panchanga ,Lord ,Makara Rasi ,Kumbha Rasi ,Saturn Transfer Festival from ,Makara ,Kulithalai Kadambavaneswarar Temple ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு