×

துறையூரில் விசிக ஆர்ப்பாட்டம்

துறையூர், டிச. 21: எம்பிக்கள் சஸ்பெண்ட் கண்டித்து துறையூரில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். துறையூர் பேருந்து நிலையம் அண்ணா சிலை முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். துறையூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் துரை.சங்கர் முன்னிலை வகித்தார். துறையூர் ஒன்றிய நகர நிர்வாகிகள் மொழி, சிவா,வெற்றியழகன், வக்கீல் ரஞ்சித் ஜெயபிரகாஷ், கமலகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது 141 எம்பிக்களை இடை நீக்கம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோஷமிட்டனர்.

The post துறையூரில் விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thadharyur ,Dharayur ,Vishikas ,Thartiyur ,Anna ,Vishika ,Dinakaran ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை