×

பாஜ ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளி, டிச.21: வேலம்பட்டியில் டாஸ்மாக் கடை கடந்த 11 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இக்கடையால் அவ்வழியாக போக்குவரத்து பாதிப்பு மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதயைடுத்து கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பாஜவினர் வேலம்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மாநில செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் கேசவன், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், கோவிந்தராஜூ, மீசை அர்ஜீனன், மகளிர் அணி தலைவர் விமலா, வலசை தர்மலிங்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

The post பாஜ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Bochampally ,Tasmac ,Velampatti ,Dinakaran ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...