×

ஒடுகத்தூர் அருகே உள்ள அரசு கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பிரசாரம்

ஒடுகத்தூர், டிச.21: ஒடுகத்தூர் அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. இதில், மாணவிகள் எழுத்து வடிவில் நின்று உறுதிமொழி எடுத்தனர். ஒடுகத்தூர் அடுத்த அகரம் நான்கு முனை சந்திப்பில் அமைந்துள்ள எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின சமத்துவம் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் சசிதரன் முன்னிலை வகித்தார். வட்டார மேலாளர் தர் வரவேற்றார். அப்போது, கல்லூரி வளாகத்தில் ஜிபிவி என்ற எழுத்து வடிவில் மாணவிகள் நின்றனர்.

பின்னர், ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் பாகுபாடின்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை ஆண், பெண் இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வோம், பெண்கள் விருப்பப்பட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம், அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம், பெண்கள் பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்வதை ஊக்குவிப்போம், அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை தடுப்போம் உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பாலின சமத்துவ உறுதிமொழி எடுத்தனர். இதில், கல்லூரி பேராசிரியர்கள் குமரேசன், விஸ்வநாதன், கோபி உட்பட வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post ஒடுகத்தூர் அருகே உள்ள அரசு கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Women ,Government College ,Odukatur ,Government Art College ,Dinakaran ,
× RELATED தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து...