×

திருச்செந்தூரில் சிக்கியுள்ளவர்களை மீட்க சிறப்பு பேருந்து தென்காசி, கன்னியாகுமரியில் 95% பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: தென்காசி, கன்னியாகுமரியில் 95சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருச்செந்தூர் கோயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை செல்லும் பாதை இன்னும் சீராகவில்லை, ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி இருந்தவர்கள், வெள்ளம் வடிந்த இடங்களில் ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களை அரசு போக்குவரத்து கழகம் மீட்டு அனுப்பி வைத்துள்ளது. தென்காசி, கன்னியாகுமரியில் 95சதவீத பேருந்துகள் இயங்க தொடங்கி விட்டது, நெல்லை, தூத்துக்குடியில் முழுமையாக வெள்ளம் வடியாத பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை.

அந்த இடங்களிலும் ஆய்வு செய்து இன்று பேருந்து சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அரசு பேருந்துகளில் கட்டணமின்றி அனுப்பி வைக்கலாம். தூத்துக்குடி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு பொருட்களை கட்டணமின்றி அனுப்பிவைக்கலாம். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எங்கு சிக்கியுள்ளனர் என்பது குறித்து தகவல் பெறப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, சாலைகள் சீரமைக்கப்படும் இடங்களில் உடனடியாக பேருந்து சேவை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post திருச்செந்தூரில் சிக்கியுள்ளவர்களை மீட்க சிறப்பு பேருந்து தென்காசி, கன்னியாகுமரியில் 95% பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruchendur, Tenkasi ,Kanyakumari ,Transport Minister ,Chennai ,Sivashankar ,Tenkasi ,Tiruchendur Tenkasi ,
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?