- திருநள்ளார்
- பகவான் சனி
- மகரம்
- கும்பம்
- காரைக்கால்
- திருநள்ளாறு
- ஸ்ரீ தர்பரேன்ஸ்வரர்
- தேவஸ்தானம்
- ஸ்ரீ சனி தேவன் கோயில்
- சனி
- மகர
- கும்பா
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரேன்ஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனி பகவான் கோயில் உள்ளது. இங்கு சனி பகவானுக்கு தனி சன்னதி இருப்பதாலும் ஸ்ரீசனீஸ்வரர் அனுகிரக மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த சனி பெயர்ச்சியானது நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சனி பகவான், மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு இடம்பெயர்ந்தார். முன்னதாக சனி பெயர்ச்சியை முன்னிட்டு அனுக்கிரக மூர்த்தி ஸ்ரீசனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களாக நல்லெண்ணெய், திரவிய பொடி, மஞ்சள், பால், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
அபிஷேகத்தை தொடர்ந்து ஸ்ரீசனி பகவானுக்கு தங்க கவசம் அணிவித்து மகாதீபாரதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீசனீஸ்வரர் வாக்கிய பஞ்சாங்கப்படி மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயரும் நிகழ்வு நடைபெற்றபோது, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, வசந்தகால் மண்டபத்தில் தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் ஸ்ரீ சனீஸ்வரருக்கும், தங்க வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீ சனிபகவானுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சனி பகவானை வழிபட்டனர். முன்னதாக புனித தீர்த்தமாக கருதப்படும் நலன் தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடி விநாயகரை வழிபட்டனர். அதனை தொடர்ந்து மூலவர் தர்பார் ஈஸ்வரர் பின்னர் அனுகிரக மூர்த்தி சனி பகவானையும் வழிபட்டனர்.
* ஆஸ்திரேலியாவில் இருந்து 6 டன் பூக்கள் இறக்குமதி
திருநள்ளாறு ஸ்ரீசனி பகவான் கோயில் சனிப்பெயர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளாக சனி பெயர்ச்சிக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. சனிப்பெயர்ச்சி அலங்காரத்திற்காக பிரத்தியேகமாக ஆஸ்திரேலியா வளைகுடா நாடுகளிலிருந்து ஆர்கேட், கார்வின்ஸ், ஆன்திரிக்ஸ், போன்ற வெளிநாட்டு மலர் வகைகளும், பெங்களூரில் இருந்து 50க்கும் மேற்பட்ட ரோஸ் பூக்களை கொண்டும் 6 டன் அளவில் பூ வகைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 1 டன் அளவில் காய்கறிகள், இளநீர், தேங்காய், சோளம் உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு இறைவடிவில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
The post மகரத்திலிருந்து கும்பத்திற்கு இடம் பெயர்ந்த சனிபகவான் திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள் appeared first on Dinakaran.