×

ஊழல் புகார் 2 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பதவி நீக்கம்

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக கலைச்செல்வி என்பவர் பணியாற்றி வந்தார். இவர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கல்கரை மற்றும் மண்கரை அமைக்கும் பணிக்காக ரூ.3 லட்சத்திற்கு, உயிரிழந்த தனது மாமனார் கந்தசாமி பெயரில் அரசு விதிமுறைகளுக்கு முரணாக நிர்வாக அனுமதி பெற்றதாக புகார் எழுந்தது. தொடர்ந்து இதுகுறித்த உயர் அதிகாரிகளின் விசாரணைக்கு ஆஜராகாமல் அலட்சியப்படுத்தியுள்ளார்.

இதேபோல், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம் தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக அமுதா, வேலை உத்தரவு வழங்காமல் 3 பணிகளை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ள அனுமதித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்ற ஒப்பந்தாரர்களுக்கு பில் வழங்க அந்த ஊராட்சியின் செயலாளரும், அமுதாவின் கணவரும் லஞ்சம் பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 2 பேரும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட்டுள்ளனர். இந்நிலையில் 2 பேரையும் பதவி நீக்கம் செய்து சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

The post ஊழல் புகார் 2 ஊராட்சி மன்ற பெண் தலைவர்கள் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Women Panchayat Council ,Salem ,Kalachelvi ,Baithur Panchayat Council ,Attur Panchayat Union of Salem District.… ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...