×

பவானி அருகே இன்று கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: ஆவின் பால் பாக்கெட்டுகள் உடைந்து சேதம்

பவானி: பவானி கூடுதுறை பிரிவு அருகே இன்று காலை கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆவின் பால் பாக்கெட்டுகள் உடைந்து சேதமானது. மேட்டூரில் இருந்து சாம்பல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி இன்று அதிகாலை பவானி வழியாக சென்று கொண்டிருந்தது. பவானி கூடுதுறை பிரிவு அருகே வளைவில் லாரி திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் ஆவின் பால் விநியோகத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகள் உடைந்து சிதறி பால் ரோட்டில் ஆறாக ஓடியது.

இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த பவானி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பவானி கூடுதுறைக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகாலை நேரங்களில் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது பக்தர்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியை மீட்க பெருந்துறையில் இருந்து ராட்சத வாகனம் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

The post பவானி அருகே இன்று கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து: ஆவின் பால் பாக்கெட்டுகள் உடைந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Bhawani Kuduthurai ,Dinakaran ,
× RELATED பவானி நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு