×

தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. பின்னர் மழை குறைந்ததால், அணை நீர்மட்டம் குறைந்தது. இந்நிலையில், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அணையில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவை நேற்று வினாடிக்கு 1,867 கனஅடியில் இருந்து படிப்படியாக குறைத்து இன்று காலை 105 அடியாக குறைத்தனர். இதனால், தற்போது அணையின் நீர்மட்டம் 139 அடியை தாண்டி உள்ளநிலையில், விரைவில் 142 அடியை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 139.25 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,518 கனஅடி. அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 105 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 6,937 மில்லியன் கனஅடி.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.57 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,994 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 3,669 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்பு நீர் 5720 மில்லியன் கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 236 கனஅடி. அணையிலிருந்து வினாடிக்கு 236 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 100 மில்லியன் கனஅடி. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 56.30 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 214 கனஅடி. அணையிலிருந்து 214 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 462.15 மில்லியன் கனஅடி. மழையளவு: பெரியாறு 3.2 மி.மீ, சோத்துப்பாறை 1 மி.மீ.

The post தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyar dam ,Cudalur ,Mullaperiyar dam ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...