×

பெருமழையால் பாதிப்பு!: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பாலத்தில் நின்றுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பாலத்தில் நின்றுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக அங்கு ஹெலிகாப்டர் வந்துள்ளது. 3 நாட்களாக ஏரல் பகுதியில் எந்த உதவியும் கிடைக்காத நிலையில் தற்போது ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது.

அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உணவு மற்றும் உடைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கடந்த 3 நாட்களாக மின்சாரம் மற்றும் அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வருகின்றனர். தற்போது கூட ஒரு சில பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

பெருவெள்ளம் ஆர்ப்பரித்து சென்றதன் காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஏரல் பாலத்தில் உணவின்றி தஞ்சமடைந்த மக்களுக்கு தமிழக அரசின் உதவியோடு ஹெலிகாப்டர் மூலமாக உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்ததால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

The post பெருமழையால் பாதிப்பு!: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பாலத்தில் நின்றுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகம்..!! appeared first on Dinakaran.

Tags : Aral bridge ,Tuticorin district ,Thoothukudi ,Eral bridge ,Thoothukudi district ,Eral ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...