×

மிமிக்ரி என்பது ஒரு கலை.. நாடாளுமன்ற நிகழ்வில் நடித்துக் காட்டியது ஜெகதீஷ் தங்கரை குறிப்பது அல்ல: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம்

டெல்லி: ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அவையில் விளக்கம் அளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. இதையடுத்து ஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டில் அமர்ந்தபடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு ராகுல் காந்தி வந்த போது, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த எம்பி கல்யாண் பானர்ஜி மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் போல மிமிக்ரி செய்து நடித்து காட்டினார். முதுகெலும்பை வளைத்து குனிந்து நின்றபடி அவர் ராகுலைப் பார்த்து முதுகெலுப்பு இருக்கிறதா என்பது பற்றி தன்கரை போல நடித்து காட்டினார். இதைப் பார்த்து சக எம்பிக்கள் கைதட்டி சிரித்தனர். ராகுலும் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு மாநிலங்களவையில் அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கமளித்தார். மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் நடித்துக் காட்டியது ஜெகதீஷ் தங்கரை குறிப்பது அல்ல என்றும் ஆதிர் ரஞ்சன் கருத்து தெரிவித்துள்ளார். மிகப் பெரிய பதவியில் இருக்கும் ஜெகதீஷ் தங்கர், பிரச்சனைக்கு ஜாதிச் சாயம் பூசலாமா என்றும் ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post மிமிக்ரி என்பது ஒரு கலை.. நாடாளுமன்ற நிகழ்வில் நடித்துக் காட்டியது ஜெகதீஷ் தங்கரை குறிப்பது அல்ல: ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Jagadish Thangar ,Adhir Ranjan Chowdhury ,Delhi ,Congress ,Adhir Ranjan Chowdhury… ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...