×

தஞ்சாவூர் விளார் சாலையில் புதிய சிற்றுணவு தொழில் மையம் திறப்பு

தஞ்சாவூர், டிச.20: தஞ்சாவூர் விளார் சாலையில் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் புதிய சிற்றுணவு தொழில் மையம் திறக்கப்பட்டது. தஞ்சாவூர் விளார் சாலை பாப்பா நகரில் நேற்று தென்னை உழவர்கள் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் புதிய சிற்றுணவு தொழில் மையம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு வந்தவர்களை தஞ்சை தென்னை உழவர் உற்பத்தியாளர் தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த புதிய சிற்றுணவு தொழில் மையத்தை சென்னை நபார்டு தலைமை பொது மேலாளர் சங்கர் நாராயணன் திறந்து வைத்தார். துணை வேளாண்மை இயக்குனர் வித்யா ( வேளாண் வணிகம் ), தஞ்சை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிவண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

இந்த மையத்தில் தேங்காய் அரைப்பது, எண்ணெய் எடுப்பது, அனைத்து வகை மசாலா பொடிகள், சிற்றுணவு, மற்றும் சிறு தீனி வகைகள் ஏற்றுமதிக்காகவும், உள்நாட்டு சந்தைக்காகவும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. மேலும் தென்னை வணிகத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சை திருமலை சத்திரம் பகுதியில் மத்திய அரசின் ஷியாம ப்ரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கத்தின் கீழ் வெல்லம் தயாரிக்கும் தொழில் மையமும் திறக்கப்பட்டது. இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் தென்னை உழவர் உற்பத்தியாளர் இயக்குனர்கள் சரவணன், சந்திர மோகன், அண்ணாதுரை, வசந்தி, முதன்மை அதிகாரி நவீன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் விளார் சாலையில் புதிய சிற்றுணவு தொழில் மையம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vilar Road, Thanjavur ,Thanjavur ,Snack Industry Center ,Coconut Growers Company ,Thanjavur… ,New Snack Industry Center ,Vilar Road ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...