×

உதயநத்தம் ஊராட்சியில் ₹15 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர்

தா.பழூர், டிச.20: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட உதயநத்தம் ஊராட்சி, கோடாலி காலனியில், ரூ.15 லட்சம் மதிப்பீட்டில், 63 கிலோ வாட் மின்மாற்றியை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் க.சொ.க. கண்ணன் துவக்கி வைத்தார். அதேபோல் கோடாலி கிராமத்தில், ஜல் ஜீவன் மிஷன்2020 -2021 திட்டத்தின் கீழ், கோடாலி காலனியில் ரூ.15.07 லட்சம் மதிப்பீட்டில், 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி அமிர்தலிங்கம், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன், பொறியாளர் ரேவதி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் மண்டோதரி ராமையன், ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராமதுரை, பொருளாளர் நாகராஜன், மாவட்ட அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், கார்த்திகை குமரன், சேகர், சம்பந்தம், தங்கபிரகாசம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

The post உதயநத்தம் ஊராட்சியில் ₹15 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர் appeared first on Dinakaran.

Tags : Udayanatham Panchayat ,Tha.Balur ,Tha.Balur Union ,Jayangkondam Assembly Constituency ,Ariyalur District ,Kodali Colony ,
× RELATED அனுமதி இன்றி மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்