×

வீடு இடிந்த குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

பரமக்குடி, டிச.20: பரமக்குடி அருகே திணைகுளம் கிராமத்தில் கனமழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தது. இதனை பார்வையிட்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பார்த்திபனூர் பகுதியில் கனமழை பெய்ததால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

இதுகுறித்து பரமக்குடி வட்டாட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கள நிலவரங்களை கேட்டறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வருகிறார். பரமக்குடி அருகே உள்ள திணைகுளம் கிராமத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தது. இதனை நேரில் சென்று பார்வையிட்ட எம்எல்ஏ முருகேசன் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். உடன் பரமக்குடி வட்டாட்சியர் ரவி, வருவாய் அலுவலர் கருப்புசாமி,கிராம நிர்வாக அலுவலர் சரவணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் நதியா மனோகரன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கமுதி ஒன்றியம் வளையப்பூக்குளம் கிராமத்தில் கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார். கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,கமுதி வட்டாட்சியர் சேதுராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை மற்றும் சங்கரபாண்டி, ஒன்றிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட பிரதிநிதி பாரதிதாசன் மற்றும் மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் இருந்தனர்.

The post வீடு இடிந்த குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Thinaikulam ,Paramakudi ,Dinakaran ,
× RELATED பரமக்குடி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்