×

கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் ஆபத்தை உணராமல் சென்டர் மீடியன்களை தாண்டும் மக்கள் தடுத்து நிறுத்த கோரிக்கை

கரூர், டிச. 20: கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் ஆபத்தை உணராமல் சென்டர் மீடியன்களை தாண்டும் நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளின் நடுவில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு சாலை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் உயரமான அளவில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் சுற்றித்தான் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.ஆனால், கரூர் பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள தெற்கு பிரதட்சணம் மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலைகளில் எளிதில் தாண்டிச் செல்லும் வகையில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய சந்திப்பு பகுதி சாலைகளான தெற்கு மற்றும் வடக்கு பிரதட்சணம் சாலைகளில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த சாலைகளில் அரசு அலுவலகங்கள், தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு செயல்பட்டு வருகிறது.இதன் காரணமாக அனைத்து தரப்பு வாகன போக்குவரத்தும் இந்த சாலைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எளிதில் தாண்டக்கூடிய வகையில் இந்த தடுப்புச் சுவர் உள்ளதால், ஆபத்தை உணராமல் பெரும்பாலான மக்கள் வாகனங்களை கடந்து அதனை தாண்டிச் செல்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்து நடைபெற அதிகளவு வாய்ப்புகள் உள்ளன. எனவே, இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள
வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் ஆபத்தை உணராமல் சென்டர் மீடியன்களை தாண்டும் மக்கள் தடுத்து நிறுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur North Prattsanam road ,Karur ,Dinakaran ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...