×

திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் மார்கழி திருவிழா

தக்கலை, டிச.20: திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் மார்கழி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிேயற்றத்திற்கான பூஜையை கோயில் தந்திரி சுப்பிரமணியரூ, மேல்சாந்தி வெங்கட்ராமன் போற்றி ஆகியோர் மேற் கொண்டனர். அபிஷேகம், திருவிளக்கு பூஜை, சுவாமி பவனி வருதல் ஆகியன நடைபெற்றது. 26ம் தேதி 9ம் நாள் விழாவில் கலச பூஜை, கலச அபிஷேகம், பந்திருநாளி வழிபாடு, லட்ச தீபம் ஏற்றுதல், பள்ளி வேட்டை, ஆகியனவும் 10ம் விழாவில் ஆறாட்டும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செய்துள்ளது.

The post திருவிதாங்கோடு மகாதேவர் கோயில் மார்கழி திருவிழா appeared first on Dinakaran.

Tags : Travancore Mahadev Temple Margazhi Festival ,Thakkalai ,Travancore Mahadeva Temple Margazhi Festival ,Tantri ,Subrahmaniyaru ,Melasanthi ,Travangodu Mahadev Temple Margazhi Festival ,
× RELATED குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி