×

₹7 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, டிச.20: நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் 70 மூட்டையும், உருண்டை மஞ்சள் 40 மூட்டை, பனங்காளி மஞ்சள் 10 மூட்டை என மொத்தம் 120 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விரலி மஞ்சள் அதிகப்பட்சம் குவிண்டால் ஒன்றுக்கு ₹10,365க்கும், குறைந்தபட்சம் ₹7,222க்கும், உருண்டை ரக மஞ்சள் அதிகப்பட்சம் ₹9,042கும், குறைந்தபட்சம் ₹5,865க்கும், பனங்காளி ரக மஞ்சள் அதிகபட்சம் ₹16,265க்கும், குறைந்தபட்சம் ₹3,012 வரை ஏலம் போனது. மொத்தம் 120 மூட்டைகள் ₹7 லட்சத்துக்கு விற்பனையானது.

The post ₹7 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Namakrippet Agricultural Producers Sales Association ,Dinakaran ,
× RELATED சாலையில் பெருக்கெடுத்து ஓடிய 1.5 லட்சம் முட்டைகள்