×

காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு

காவேரிப்பட்டணம், டிச.20: காவேரிப்பட்டணம் ஒன்றியம் கரகூரில் காலை உணவு திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. காவேரிப்பட்டணம் ஒன்றியம் கரகூர் அரசு தொடக்கப்பள்ளியில், தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கூறப்படும் கருத்துக்களை அறிந்துகொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட, அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து டாக்டர் கார்த்திகேயன் தலைமையில், மருத்துவர்கள் மஞ்சுளா, கோகிலா ப்ரீத்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் காலை உணவுத் திட்டத்தினால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம், வளர்ச்சி குறித்து கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, வட்டார கல்வி அலுவலர் தாசூன், உதவி ஆசிரியர்கள் சிவானந்தம், சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Karakoor ,Kaveripattanam Union Karakur Government Primary School ,Dinakaran ,
× RELATED ₹12 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை