×

தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்

 

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள ரும்பு குப்பம், வியட்னாம் காலனி, பாலயோகி நகர், அருந்ததியர் காலனி, பாலகிருஷ்ணாபுரம், புதுப்பேட்டை, ராமச்சேரி கண்டிகை, தேவாங்கு தெரு, அண்ணா நகர், பாலீஸ்வரன் கண்டிகை உள்ளிட்ட 12 வார்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன், தூய்மை பணியாளர்களைக் கொண்டு கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து நேற்று ஊராட்சிமன்ற அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, துணைத் தலைவர் எல்லப்பன் உள்ளிட்டோர் 5 கிலோ அரிசி, பெட்ஷீட், குளியல் சோப்பு, தேங்காய் எண்ணெய் ஆகிய பொருட்களை 40 தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர். மேலும் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் ஆங்காங்கே மின்கம்பங்களும் மரங்களும் சாய்ந்தன. அதனை மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் சீரமைத்து மின்சாரம் வழங்கினர். அவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

The post தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Pudukummidipoondi ,Kummidipoondi ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு...