×

பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பேராசிரியர் க. அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: ‘யாரோ சிறியர் நரியர் சூதோ வாதோ செய்திடத் துணிவரேல் பேராசிரியர் கூர்வேல் பிளக்கும். தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும், பெரியாரின் பிள்ளைகள் நாம் பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும் பிரியாத இருவண்ணக் கொடியே நாம்’ என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Anbazagan ,Chief Minister ,M. K. Stalin ,Chennai ,K. Chief Minister ,M.K.Stalin ,Anbazhagan ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...