×

பாஜவில் இணைந்தார் அதிமுக மாஜி எம்எல்ஏ வெங்கடாசலம்

சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் மாவட்ட செயலாளருமான எஸ்.இ.வெங்கடாசலம் நேற்று, சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தார். அங்கு, பாஜ மாநில துணை தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி. துரைசாமி, கரு.நாகராஜன் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். அவருடன் கொண்டலாம்பட்டி அமமுக பகுதி செயலாளர் துளசி கிருஷ்ணமூர்த்தி, சூரமங்கலம் பகுதி செயலாளர் கே.சுப்பிரமணியன், அம்மாபேட்டை பகுதி செயலாளர் கே.சரவணன் உள்ளிட்டோரும் பாஜவில் இணைந்தனர். பாஜ மாநில செயலாளர் மதி பிரமிளா சம்பத், சேலம் மாநகர மாவட்ட தலைவர் பி. சுரேஷ்பாபு, கல்வியாளர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெ.ஜெயராமன் உடன் இருந்தனர்.

The post பாஜவில் இணைந்தார் அதிமுக மாஜி எம்எல்ஏ வெங்கடாசலம் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,Venkatachalam ,BJP ,Chennai ,district secretary ,S. E. Venkatachalam ,D. Nagar, Chennai ,AIADMK ,MLA ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...