×

காயல்பட்டினத்தில் 116 செ.மீ.: இதுவரை இல்லாத மழை

சென்னை: தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் காயல்பட்டினத்தில் மட்டும் 116 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வரலாறு காணாத மழை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமரிக் கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு காற்றுசுழற்சி அதே இடத்தில் நிலை கொண்டது. அப்போது கிழக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு பகுதியில் இருந்து வந்த நீராவிக் காற்று உறிஞ்சப்பட்டதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்தது. குறிப்பாக காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 950மிமீ மழை ெகாட்டித் தீர்த்தது.

காயல்பட்டினத்தில் மட்டும் இரண்டு நாளில் 116 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வரலாறு காணாத மழை என்று கூறப்படுகிறது. வட கிழக்கு பருவமழையை பொறுத்தவரையில், இந்த ஆண்டில் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரையில் கன்னியாகுமரியில் இயல்பாக 518 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 1100 மிமீ மழை பெய்துள்ளது. காரைக்காலில் இயல்பாக 938மிமீ பெய்ய வேண்டியதற்கு பதிலாக 1045 மிமீ மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 766 மிமீக்கு பதிலாக 1088 மிமீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலியில் இயல்பாக 483 மிமீ மழைக்கு பதிலாக 1211 மிமீ மழை பெய்துள்ளது. மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் வட கிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post காயல்பட்டினத்தில் 116 செ.மீ.: இதுவரை இல்லாத மழை appeared first on Dinakaran.

Tags : Kayalpatnam ,Chennai ,Kayalpattinam ,
× RELATED காயல்பட்டினத்தில் பட்டப்பகலில்...