×

நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்: திமுக நகர மன்ற தலைவர் வழங்கினார்

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, களப்பணியாற்றிய 150 தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை திமுக நகர மன்ற தலைவர் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 மற்றும் 4ம் தேதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் நகராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், ஜெயலட்சுமி நகர், அமுதம் காலனி, மீனாட்சி நகர், அருள் நகர், காமாட்சி நகர், ஜெகதீஷ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதில், மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி தனியார் நிறுவனம் மூலம் 150 தூய்மை பணியாளர்களுக்கு தலா 5 லிட்டர் சமையல் எண்ணெய், 10 கிலோ அரிசி, 5 கிலோ பருப்பு, 5 கிலோ கோதுமை பவுடர், 2 கிலோ ரவை, குளியல் சோப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் முகாம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.

இதில், திமுக நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கி வழங்கினார். துணை தலைவர் லோகநாதன், நகராட்சி ஆணையாளர் தாமோதரன், பொறியாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம்: திமுக நகர மன்ற தலைவர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Nandivaram- ,Kooduvanchery Municipality ,DMK City Council ,President ,Kuduvanchery ,Nandivaram-Kudovanchery ,DMK city ,
× RELATED நந்திவரம் – கூடுவாஞ்சேரி...