×

அஞ்சூரில் உபரிநீர் ஊருக்குள் புகாமல் இருக்க ரூ.49.60 லட்சத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சுற்று சுவர்: வரி பணம் வீண் என புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளுக்குள் ஏரியின் உபரிநீர் புகாமல் இருக்கு சுற்று சுவர் அமைத்து மக்கள் வரி பணம் வீணாடித்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி 2022-2023ம் ஆண்டு அஞ்சூர் ஊராட்சி பொது நிதியில் தேவையின்றி ரூ.49 லட்சத்து 60 ஆயிரம் சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது என அஞ்சூர் பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இங்கு, ஏற்கனவே அஞ்சூர் ஏரியில் தரமற்ற தார் சாலை அதேபோல், அஞ்சூல் தெருக்களில் தரமற்ற சிமென்ட் சாலை, வேகத்தடை அமைத்ததில் ஊழல் என அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. இந்நிலையில், அஞ்சூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை தடுக்கும் வகையில் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளுக்கு பாதுகாக்கும் வகையில் சுற்று சுவர் அமைத்துள்ளது. மக்கள் வரி பணத்தை தேவையின்றி வீணாக்கப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இந்த சுற்று சுவர் அமைத்ததிலும் ஊழல் நடந்துள்ளதாக அஞ்சூரில் பேசப்பட்டு வருகின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் முன்னிலையில் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏரி ஆக்கிரமிப்பில் இருக்கும் வீடுகளை அகற்ற வேண்டும். அதேபோல், சுற்று சுவர் அமைக்க ரூ.49 லட்சத்து 60 ஆயிரம் பணம் செலவு செய்ததாக பலகை வைத்துள்ள அஞ்சூர் ஊராட்சி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post அஞ்சூரில் உபரிநீர் ஊருக்குள் புகாமல் இருக்க ரூ.49.60 லட்சத்தில் ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சுற்று சுவர்: வரி பணம் வீண் என புகார் appeared first on Dinakaran.

Tags : Anjur ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை