×

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூ.1.46 கோடி காணிக்கை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூ.1.46 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் செ. சிவராம்குமார், பி.எஸ்.சி, பி.எல்., முன்னிலையில் 19.12.2023 அன்று பிரதான திருக்கோயில் மற்றும் உபகோயில் உண்டியல்கள் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின்போது ராமநாதபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், இத்திருக்கோயிலின் தக்காரான சிவகங்கை மண்டல இணை ஆணையரின் பிரதிநிதி, திருக்கோயில் கண்காணிப்பாளர், இராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் ஆய்வர்கள், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

மேற்படி அனைத்து உண்டியல்கள் திறப்பின் மூலம் வரப்பெற்ற மொத்த ரொக்கம் ரூ.1,46,47,540/- (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்து ஆறு இலட்சத்து நாற்பத்தி ஏழாயிரத்து ஐநூற்று நாற்பது மட்டும்). பலமாற்று பொன் இனங்கள் 84 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 6 கிலோ 720 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 91 எண்ணம் வரப்பெற்றுள்ளன. என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

The post ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் ரூ.1.46 கோடி காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Rameswaram Ramanathaswamy Temple Undiyal Rameshwaram ,Ramanathaswamy Temple Undiyal ,Rameswaram Ramanathaswamy Temple ,Commissioner ,Executive Officer ,Rameswaram Ramanathaswamy Temple Undiyal ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...