×

பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்க உத்தரவு

தேனி: பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள, பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்காலின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் 30 நாட்களுக்கு முழுமையாகவும், 60 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 90 நாட்களுக்கு 518 மில்லியன் கனஅடி தண்ணீரை 19.12.2023 முதல் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 100 கன அடி நீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Periyar Dam ,Theni ,Theni District, Kampam Valley, PDR ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...