×

கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல்

தேவையான பொருட்கள்:

மீந்து போன சாதம் – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தேங்காய் – 1 1/2 கப் (துருவியது)
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
நெய் – தேவையானஅளவு

செய்முறை:

முதலில் சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவை சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் தேங்காய், வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.பிறகு பிசைந்த மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் நெய் தடவி, இந்த உருண்டையை ஒவ்வொன்றாக வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், தட்டி வைத்துள்ள பத்தலைப் போட்டு, குறைவான தீயில் வைத்து, பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான கேரளாக ஸ்டைல் பத்தல் தயார்.

The post கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...