×

டெல்லியில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன. 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

The post டெல்லியில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் 4-வது ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...