×

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்தது: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு


நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை குறைந்ததால், பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. இதனால் இரண்டு மாவட்டங்களும் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அமைந்துள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு அதிக நீர்வர்த்து இருந்தது. இதனால் பாபநாசம் அணையில் இருந்து 32 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மணிமுத்தாறு அணையில் இருந்தும் 12 ஆயிரம் கன அடி தண்ணீர், கடனாஅணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது தவிர காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி வரும் வெள்ள நீரும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறியது. நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள சுலக்சனா முதலியார் ஆற்றுப் பாலத்தின் கைப்பிடி சுவரின் கீழ் பகுதியை தொட்டுக் கொண்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை, வடக்கு பைபாஸ் சாலையில் வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது.

இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிற்பகல் முதல் மழை குறைந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில்வெள்ளம் தணிந்துள்ளது. சுலக்சனா முதலியார் பாலத்தின் கீழ் 15 அடிக்கும் கீழாக வெள்ளம் குறைந்துள்ளது. எனினும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலை மூழ்கடித்தவாறு தொடர்நது வெள்ள நீர் ஓடி வருகிறது. இன்று காலை நிலவரப்படி, 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 137.10 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 11,991 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு 10,977 க அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. 156 அடி கொள்ளளவுகொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 147.14 அடியாக உள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 109.40 அடியாக உள்ளது.

அணைக்கு வரும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணைப்பகுதியில் 10.5செமீ (105 மிமீ), சேர்வலாறு அணையில் 58 மிமீ, மணிமுத்தாறு அணைப்பகுதியில் 76 மிமீ மழை பதிவாகியுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டத்தில் அம்பையில் 11.6 செமீ (116 மிமீ) மழை பதிவானது. சேரன்மகாதேவியில் 50 மிமீ, நாங்குநேரியில்22 மிமீ, ராதாபுரத்தில் 15மிமீ, நெல்லையில் 39 மிமீ, கன்னடியன் அணைக்கட்டில் 94 மிமீ, களக்ாட்டில் 56.4 மிமீ, ொடுமுடியாறு அணையில் 43 மிமீ, மூலக்கரையில் 125 மிமீ, நம்பியாறுஅணையில் 27 மிமீ, மாஞ்சோலையில் 174 மிமீ, காக்காச்சியில் 180 மிமீ, நாலுமுக்கு எஸ்டேட்டில் 190 மிமீ, ஊத்து எஸ்டேட்டில் 149 மிமீ மழை பதிவாகியுள்ளது.

The post நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் தணிந்தது: பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீர் திறப்பு குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai Tamiraparani ,Papanasam ,Manimuthar ,Nellai ,Western Ghats ,Nellai Thamiraparani ,Dinakaran ,
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...