×

முல்லை பெரியார் அணை 142 அடியை எட்டிய பிறகு வரும் நீரை கேரளாவிற்கு திறந்து விட திட்டம்: விவசாயிகள் அதிர்ச்சி

தேனி: 18-ம் கால்வாய், பிடிஆர் கால்வாய், பெரியார் கால்வாய்களுக்கு தண்ணீர் தராமல் கேரள பகுதிக்கு தண்ணீரை திறந்து விட திட்டமிட்டுள்ளதால் தேனி விவசாயிகள் அதிர்சியடைந்துள்ளனர். முல்லை பெரியார் அணையில் கடந்த 2 மாதங்களாக வடகிழக்கு பருவமழை பெய்த போது அணையின் நீர்மட்டம் 2 முறை 136 அடியை எட்டியது.

மேலும் வைகை அணையிலும் 69 அடிக்கும் மேல் நீர் மட்டம் உயர்ந்ததை அடுத்து தேனியில் உள்ள 18-ம் கால்வாய், தந்தை பெரியார் கால்வாய் மற்றும் பிடிஆர் கால்வாய்-க்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் நீர் பற்றாகுறை என காரணம் காட்டி தண்ணீர் திறக்கப்பட வில்லை என குற்றம் சாட்டபட்டது.

இந்த சூழலில் தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்துள்ளது. நீர்வரத்து அதிகமானால் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டும், அதன் பிறகு வரும் நீரை முழுவதுமாக கேரளாவிற்கு திறந்து விட பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடுக்கி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் தேனி விவசாயிகள் பெரும் அதிர்சியடந்துள்ளனர்.

The post முல்லை பெரியார் அணை 142 அடியை எட்டிய பிறகு வரும் நீரை கேரளாவிற்கு திறந்து விட திட்டம்: விவசாயிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Mullai Periyar dam ,Theni ,PDR canal ,Periyar ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...