×

“என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா” : பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

சென்னை : மறைந்த பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், “யாரோ சிறியர் நரியர்
சூதோ வாதோ செய்திடத் துணிவரேல்
பேராசிரியர் கூர்வேல் பிளக்கும்!
தீராப் பிணியும் தீர்ந்து தமிழினம் பிழைக்கும்!

பெரியாரின் பிள்ளைகள் நாம்
பேரறிஞர் தம்பிகள் நாம் – என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம்!”

என முத்தமிழறிஞர் கலைஞர் கவிபாடிய கழகத்தின் கொள்கைத்தூண், என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா, தமிழர் நலவாழ்வுக்காகவே வாழ்ந்து மறைந்த இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்தநாளில் அவரின் நீங்கா நினைவுகளை நெஞ்சிலேந்தி வணங்குகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post “என் வளர்ச்சிக்கு ஊக்கம் வழங்கிய பெரியப்பா” : பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!! appeared first on Dinakaran.

Tags : Periyappa ,Chief Minister ,M.K.Stal ,Prof. ,Anbazhagan ,Chennai ,M.K.Stalin ,Minister ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...