×

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்படும் பயணிகளை மீட்டு அழைத்துவர 13 பேருந்துகள் தயார்..!!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்படும் பயணிகளை மீட்டு அழைத்துவர 13 பேருந்துகள் தயார்நிலையில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வரை பேருந்துகள் இயக்கப்படும். பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 38 கி.மீ. தொலைவில் உள்ள வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவர். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு இயக்கும் சிறப்பு ரயிலில் பயணிகள் செல்லவுள்ளனர்.

 

The post ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்படும் பயணிகளை மீட்டு அழைத்துவர 13 பேருந்துகள் தயார்..!! appeared first on Dinakaran.

Tags : Srivaikundam railway station ,Thoothukudi ,Srivaikundam ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது