×

கல்லறை தோட்டத்தை மீட்டு தர வேண்டும் திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் சிறுநாயக்கன்பட்டி மக்கள் மனு

 

திண்டுக்கல், டிச. 19: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஏ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டி ஊர் மணியக்காரர் சகாராஜ், ஊர் நாட்டாமை பால்ராஜ், ஊர் நிர்வாகிகள் சவேரியார் ஆரோக்கியசாமி, கிறிஸ்துவ மக்கள் முன்னணி இயக்க மாநில தலைவர் மரிய ஆரோக்கியம் தலைமையில் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் வந்து கலெக்டர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். அம்மனுவில் தெரிவித்ததாவது: ஏ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டியில் சுமார் 5000 பேர் வசித்து வருகிறோம்.

இங்கு யார் இறந்தாலும் அவர்கள் நல்லடக்கம் செய்வதற்கு திண்டுக்கல்- மதுரை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை அருகில் கல்லறை தோட்டம் அமைந்து இருந்தது. அந்த இடத்தை நெடுஞ்சாலை துறை விரிவாக்கத்தின் போது கையகப்படுத்தப்பட்டு விட்டது. அதன் காரணமாக ஊர் மக்கள் சார்பில் எங்கள் ஊரில் அருகே சுமார் 70 சென்ட் நிலத்தை தனியார் ஒருவரிடம் விலை கொடுத்து வாங்கி கல்லறை தோட்டம் அமைத்துள்ளோம். தற்போது அதனை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் எங்கள் ஊரில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

The post கல்லறை தோட்டத்தை மீட்டு தர வேண்டும் திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் சிறுநாயக்கன்பட்டி மக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Sirunayakanpatti People ,Dindigul Collector's Office ,Dindigul ,Dindigul Collector Office ,Sirunayakkanpatti ,Maniyakaran Sakharaj ,Ur Natama ,Dindigul Collector Office Sirunayakkanpatti People's Petition ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய்...