- அஞ்சுக்ரமம்
- சுசீந்திரன்
- சுசிந்தாரம்
- கவிமணி நகர்
- அஞ்சநேயர் நகர்
- ஆசாத் நகர்
- அகரை
- கங்காட்
- Susindram
- அஞ்சுகரம்
சுசீந்திரம், டிச.19: சுசீந்திரம் அருகே கவிமணி நகர், ஆஞ்சநேயர் நகர், ஆசாத் நகர், அக்கரை, கற்காடு ஆகிய பகுதிகளில் மழையின் காரணமாக வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. ஆற்றில் நீர்மட்டம் உயர உயர ஊருக்குள்ளும் வெள்ளம் அதிகரிக்க தொடங்கியது. வீடுகளின் நிலைமட்டம் வரை தண்ணீர் உயர்ந்ததால் மக்கள் பீதியடைந்தனர். குறிப்பாக ஆற்றை விட தாழ்வாக உள்ள கவிமணி நகர், ஆஞ்சநேயர் நகரில் அதிகளவு வெள்ளம் புகுந்தது. ஆஞ்சநேயர் நகரில் மழைநேரங்களில் வெள்ளம் மணக்குடியான் கால்வாய் வழியாக பாய்ந்து மணக்குடி காயலுக்கு சென்றுவிடும். தற்போது கால்வாய் அடைப்பு காரணமாக வெள்ளம் தேங்கிவிடுகிறது. மழைநீரால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் தூங்காமல் இரவு முழுவதும் விழித்து இருந்தனர். தேரூர் தத்தையார்குளம் பகுதி வயல்களில் மழைநீர் புகுந்து தேங்கி நிற்கிறது. 2 நாட்களுக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் பயிர்கள் அழுகிவிடும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பேரூராட்சி தலைவர் அனுஷியா, செயல் அலுவலர் கமலி, துணைத்தலைவர் சுப்ரமணிய பிள்ளை, கவுன்சிலர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்ரமணியம் நேற்றுமுன்தினம் இரவு சுசீந்திரம் பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அஞ்சுகிராமம் சந்திப்பில் காவல் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் நேற்று காலை வரை வடியாமல் இருந்தது. இதனால் இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையில் போலீசார், பொதுமக்களுடன் இணைந்து ஜேசிபி எந்திரம் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அழகப்பபுரத்தில் மெயின் ரோட்டில் பெரிய ராட்சத மரம் விழுந்து போக்குவரத்துக்கு தடைபட்டது. இதை பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, காங்கிரஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர் அருண் டிசாசோ மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் அழகப்பபுரத்தில் நடு ரோட்டில் மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தது. அதனை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.
The post அஞ்சுகிராமம், சுசீந்திரத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.