×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.2,200க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று அனைத்து பூக்கள் விலையும் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.2,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா, ஓசூர், கடப்பா மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதேபோல் அனைத்து பூக்களின் வரத்து குறைவால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த 6 நாட்களாக அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று காலை ஒரு கிலோ மல்லி மற்றும் ஐஸ் மல்லி ரூ.2,200க்கு விற்கப்பட்டது. இதேபோல் முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.1,500க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும் விற்கப்பட்டது.

அரளிப்பூ ரூ.300க்கும், சம்பங்கி ரூ.200க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.130க்கும், சாமந்தி மற்றும் பன்னீர் ரோஸ் ரூ.120க்கும் விற்கப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாகக்குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை 3 மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இன்று (நேற்று) காலையும் விலை குறையாமல் பூக்கள் விற்பனை செய்யப்பட்டது. பனி சீசன் முடியும்வரை அனைத்து பூக்களின் விலை குறையாது என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.2,200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,CHENNAI ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...