×

காயரம்பேடு ஊராட்சி சார்பில் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, காயாரம்பேடு ஊராட்சி சார்பில் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் மிக்ஜாம் புயல் தொடர் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில், பல ஆயிரகனக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கு நியாய விலை கடைகளில் டோக்கன் வழங்கப்பட்ட தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சி சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலெக்டர் ராகுல்நாத் நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது.

அதில் கூறியிருப்பதாது: காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணன் நகர், மூலக்கழனி, விஷ்ணுபிரியா அவென்யூ ஆகிய பகுதியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதில், 3 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் நியாய விலை கடை அட்டை வைத்துள்ளனர். எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் அதிகாரிகள் காயரம்பேடு ஊராட்சியில், நேரடியாக ஆய்வு மேற்கொண்டு மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ரூ.6 ஆயிரம் நிவாரண பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டும்.

இந்த நந்திவரம், கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகள் வண்டலூர் தாலுகாவுக்கு உள்ளடங்கியது. காயரம்பேடு செங்கல்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி என்பதால் நிவாரணம் வழங்கப்படவில்லையா என சந்தேகம் எழுகிறது. எனவே, வண்டலூர் தாலுகா, செங்கல்பட்டு தாலுகாவாக இருந்தாலும் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தால் தமிழக அரசும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் அரசு வழங்கி வரும் ரூ.6 ஆயிரம் நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அந்த மனுவில் கூறியுள்ளனர்.

The post காயரம்பேடு ஊராட்சி சார்பில் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kayarambedu Panchayat ,Chengalpattu ,Kayarampedu panchayat ,Guduvancheri ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...