×

ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை?

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த காடியார் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (60). இவரது மனைவி அன்னபூரணி (52), மகன் சந்தோஷ்குமார் (30). தம்பதிக்கு சந்தோஷ்குமார், ராஜேஷ் என 2 மகன்கள். ராஜேஷ் பெங்களூரில் வேலை செய்து வருகிறார். சந்தோஷ்குமார் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோருடன் வசித்து வருகிறார். தினமும் ராஜேஷ் பெங்களூரில் இருந்து தனது தாய்-தந்தையிடமும், அண்ணன் சந்தோஷ்குமாரிடம் செல்போனில் பேசி வருவது வழக்கம்.

அதன்படி ராஜேஷ் நேற்று போன் செய்து உள்ளார். அவர்கள் எடுக்காத காரணத்தால் சந்தேகமடைந்த ராஜேஷ் அவரது உறவினர்களிடம் சென்று பார்க்கும்படி தெரிவித்து உள்ளார். இதையடுத்து உறவினர்கள் ராதாகிருஷ்ணன்-அன்னபூரணியை தேடி காடியார் வீட்டுக்கு சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்ததால் காடியார் பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவர்களது இருசக்கர வாகனம், காலணிகள், கரும்பு பயிருக்கான உரம், பூச்சி மருந்து தெளிப்பதற்காக பயன்படுத்தப்படும் பொருட்கள் அங்கே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு இடையே சென்று தேடிப்பார்த்த போது ராதாகிருஷ்ணன், சந்தோஷ்குமாரும் இறந்து அழுகிய நிலையில் ஒரு இடத்திலும், அன்னபூரணி மற்றொரு இடத்தில் அழுகிய நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

The post ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை? appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Radhakrishnan ,Ghadiyar village ,Tirukovilur ,Kallakurichi district ,Annapoorani ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி உயிரிழந்த...