×

டெல்லி அசோகா ஓட்டலில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை

புதுடெல்லி: டெல்லி அசோகா ஓட்டலில் இந்தியா கூட்டணி கட்சியினர் இன்று ஆலோசனை நடத்துகிறார்கள். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பா.ஜவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம்ஆத்மி, சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட 26 கட்சிகள் ஒற்றிணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலை முன்னிட்டு இந்த கூட்டணியின் கூட்டம் 4 மாதங்களுக்கு பின்னர் டிச.6ம் தேதி டெல்லியில் நடந்தது. இதில் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் கூட்டணியில் உள்ள அனைத்து முக்கிய தலைவர்களும் பங்கேற்கும் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. டெல்லி அசோகா ஓட்டலில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வியாதவ், அவரது தந்தை லாலுபிரசாத்யாதவ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்பட மூத்த தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் மாநில வாரியாக தொகுதி பங்கீட்டை முடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.

* மம்தா, உத்தவ்வை சந்தித்தார் கெஜ்ரிவால்
இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த மேற்குவங்க முதல்வர் மம்தாவை நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். தெற்கு அவென்யூவில் உள்ள மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி இல்லத்தில் சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து எந்ததகவலும் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவையும் கெஜ்ரிவால் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

The post டெல்லி அசோகா ஓட்டலில் இன்று இந்தியா கூட்டணி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : India ,Delhi Ashoka Hotel ,New Delhi ,Allies of India ,Delhi ,Ashoka Hotel ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED எல்லா நோய்களுக்கும் சிகிச்சை...