×

சேலம் மாநாட்டை முன்னிட்டு திமுக இளைஞர் அணிக்கு 2000 டி-ஷர்ட்டுகள்: எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சேலம் இளைஞர் அணி மாநாட்டிற்கு செல்லும் இளைஞருக்கு டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ டி – ஷர்ட் வழங்கினார். திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியம், எல்லாபுரம் ஒன்றியம், மீஞ்சூர் ஒன்றியம், சோழவரம் ஒன்றியம், பூண்டி ஒன்றியம் என பல்வேறு பகுதிகள் உள்ளது. இதை சேர்ந்த திமுக இளைஞர் அணியினர் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தலில், கிராமங்களில் மக்கள் பணிகளில் ஈடுபட்டு திமுக வெற்றி பெறுவதற்கு பலமாக அமைய உறுதுணையாக உள்ளனர்.

இந்நிலையில், திமுக கழகத்தின் இளைஞரணி மாநில செயலாளரும், விளையாட்டு நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களின் பங்கு பெரும் அளவில் இருப்பதற்காக, பாசறை கூட்டம் மாவட்ட அளவில் ஒன்றிய கூட்டம், நகர கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களை நடத்தி கட்சியினுடைய கொள்கையை குறித்து பேசி வருகிறார். இதனை தொடர்ந்து, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியின் இரண்டாவது மாநாடு சேலத்தில் 24ம் தேதி நடைபெறும் என அறிவித்தார். அதில், திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு, சுயமரியாதை, திமுக கொண்டு வந்த சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் வெளிப்படுத்த உள்ளது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட ஒன்றியங்களில் இளைஞர்களுக்கு மாநாட்டுக்கு செல்வதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், நேற்று மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் 2000 டி-ஷர்ட்களை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் மற்றும் ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சோழவரம் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், பேருர் செயலாளர் அறிவழகன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் சுரேஷ், சாண்டில்யன், ஈகுவார்பாளையம் ஊராட்சி செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை உறுப்பினருமான லட்சுமி நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post சேலம் மாநாட்டை முன்னிட்டு திமுக இளைஞர் அணிக்கு 2000 டி-ஷர்ட்டுகள்: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : DMK youth team ,Salem ,MLA ,Kummidipoondi ,DJ Govindarajan ,Salem youth ,Thiruvallur… ,Dinakaran ,
× RELATED 24 நாட்களில் 8,465 கி.மீ. பயணம் உதயநிதி...