×

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் தேங்கியதற்கு இயற்கை பேரிடர் அல்ல சிபிசிஎல் தான் காரணம்: தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் திட்டவட்டம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு காரணம் இயற்கை பேரிடர் இல்லை, சிபிசிஎல் நிறுவனம்தான் என்று தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  சென்னை மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரில் எண்ணெய் கழிவு பரவியது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் இதனை விசாரித்தனர். நேற்று 4வது முறையாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், கடலோரப் பகுதியில் எண்ணெய் படலம் தற்போது ஏதும் இல்லை என கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. இந்த எண்ணெய் கசிவு இயற்கை பேரிடர் இல்லை. இதற்கு காரணம் சிபிசிஎல் நிறுவனம்தான். அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விவாதத்தையும் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், பணிகளை முடிக்க ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் மேலும் கால அவகாசம் கேட்கிறீர்கள். பழவேற்காடு பகுதியிலும் எண்ணெய் திட்டுகள் காணப்பட்டுள்ளது. அது எங்கிருந்து வந்தது, எவ்வளவு மீன்கள் இறந்துள்ளது என தொடர் கேள்வி எழுப்பினர். அனைத்து பாதிப்புகளையும் மீன்வளத்துறை, நீர்வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் தேங்கியதற்கு இயற்கை பேரிடர் அல்ல சிபிசிஎல் தான் காரணம்: தீர்ப்பாயத்தில் மாசு கட்டுப்பாடு வாரியம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Ennore estuary ,CPCL ,Control Board ,CHENNAI ,Tamil Nadu ,
× RELATED சிபிசிஎல் எண்ணை ஆலை நிறுவனம்...