×

அமைச்சர்கள், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: உயிரிழப்புகளை தடுக்க வேண்டியதுதான் தலையாய கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை அடுத்து அங்கு எடுக்க வேண்டிய நிவாரண மீட்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், ெநல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் தர், மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டெடுத்து உயிரிழப்புகளை தடுக்க வேண்டியது தான் நம் முன் தற்போது இருக்கக்கூடிய தலையாய கடமை. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, உடைகள், போர்வைகள் போன்ற பொருட்களை உடனடியாக வழங்கிட வேண்டும்’’ என்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமை செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார், ஆகியோரும், காணொலிக் காட்சி வாயிலாக வருவாய் நிர்வாக ஆணையர், கூடுதல் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர்கள், 4 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை: உயிரிழப்புகளை தடுக்க வேண்டியதுதான் தலையாய கடமை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : 4 District Collectors ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Dinakaran ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...