×

அதிகரித்து வரும் கொரோனா; அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: சீனாவில் மீண்டும் பரவிய ஜேஎன்.1 என்ற புதிய வகை மாறுப்பட்ட கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த வகை கொரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வேகமாக பரவும் என்பதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் சுதன்ஷ் பந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ெகாரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது சற்று அதிகரித்து வருகிறது.

எனவே மாநில அரசுகள் இந்த விஷயத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நோய் பரவும் அபாயத்தை குறைக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். ஒன்றிய அரசு பகிர்ந்துள்ள கொரோனா திருத்தப்பட்ட கண்காணிப்பு முறையை கடைபிடிப்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து சுகாதார நிலையங்களிலும் இன்புளுயன்சா மற்றும் கடுமையான சுவாச நோய் ஆகியவற்றை கண்காணித்து மாவட்ட வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்படி அனைத்து மாவட்டங்களிலும் போதுமான பரிசோதனைகளை உறுதி செய்யவும், ஆர்டி பிசிஆர் மற்றும் ஆன்டிஜென் சோதனைகளை மேற்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே அனைத்து மாநில சுகாதார துறை செயலாளர்களுடன் ஒன்றிய அமைச்சர மன்சுக் மாண்டவ்யா நாளை காணொலி மூலம் ஆலோ சனை நடத்துகிறார்.

The post அதிகரித்து வரும் கொரோனா; அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union government ,New Delhi ,China ,Dinakaran ,
× RELATED காலை 9.15 மணிக்குள் வரவில்லை என்றால்...