×

77 இடத்திற்கு 333 வீரர்கள் போட்டி; துபாயில் நாளை ஐபிஎல் மினி ஏலம்: டிராவிஸ் ஹெட், ரச்சின், ஷர்துல் தாகூர் கோடிகளை அள்ள வாய்ப்பு


துபாய்: பிசிசிஐ சார்பில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 17வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மாலை மதியம் 1 மணிக்கு துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் ஏலம் தொடங்குகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளின் பயிற்சியாளர்கள் நிர்வாகத்தினர் கலந்து கொண்டு வீரர்களை ஏலம் எடுக்க உள்ளனர். ஏல பட்டியலில் மொத்தம் 333 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.  ரூ. 2 கோடி, ரூ. 1.5 கோடி, ரூ. 1 கோடியே, ரூ. 75 லட்சம், ரூ. 50 லட்சம், ரூ. 40 லட்சம், ரூ. 30 லட்சம் மற்றும் ரூ. 20 லட்சம் ஆகிய அடிப்படை விலைகளில் வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக குஜராத் அணி ரூ.38.15 கோடியை இருப்புவைத்துள்து. அந்த அணி 2 வெளிநாட்டு வீரர் உள்பட 8பேரை ஏலம் எடுக்க உள்ளது. கொல்கத்தா ரூ. 32.7 கோடியுடன் 4 வெளிநாட்டு வீரர் உள்பட 12 பேரை ஏலம் எடுக்கவேண்டும். டெல்லி 9,பஞ்சாப், மும்பை,ராஜஸ்தான், உள்ளிட்ட அணிகள் 8 , ஐதராபாத், பெங்களுரு, லக்னோ, சென்னை தலா 6 வீரர்களைஏலம் எடுக்க உள்ளன. ரூ.2 கோடி ஏல பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக், கிறிஸ்வோக்ஸ், அடில் ரஷித்,டேவிட் வில்லி, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட், ஸ்மித், பாட்கம்மின்ஸ், ஹேசல்வுட், மிட்செல்மார்ஷ, சீன்அபேட், இந்தியாவின் ஷர்துல் தாகூர், ஹர்சல்பட்டேல், உமேஷ்யாதவ், தென்ஆப்ரிக்காவின் ரிலீ ரோசோவ், டுசென் உள்ளிட்டவீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், டேரில் மிட்செல், வனிந்து ஹசரங்கா, லாக்கி பெர்குசன், ஷர்துல் தாக்கூர்,ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரை ஏலம் எடுக்க கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.

பிட்ஸ்… பிட்ஸ்…
* இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
* ஏலத்தை மல்லிகா சாகர் நடத்த உள்ளார்.
* ஏல நிகழ்வை ஜியோ சினிமா ஓடிடி தளம் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக பார்க்கலாம்.
* ஏலத்திற்கான விதிகள் குறித்து அணி நிர்வாகிகளுடன் பிசிசிஐ இன்றுஆலோசனை கூட்டம்நடத்தி விளக்குகிறது.

The post 77 இடத்திற்கு 333 வீரர்கள் போட்டி; துபாயில் நாளை ஐபிஎல் மினி ஏலம்: டிராவிஸ் ஹெட், ரச்சின், ஷர்துல் தாகூர் கோடிகளை அள்ள வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : IPL ,Dubai ,Travis Head ,Rachin ,Shardul Tagore ,IPL T20 ,BCCI ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள்...