×

திஷா பதானி ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

2015-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான லோஃபர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் திஷா பதானி. அப்படத்தினை தொடர்ந்து எம்.எஸ் தோனி என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். இத்திரைப்படம் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி-யின் சுயசரிதை திரைப்படமாகும். இப்படமானது இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. இத்திரைப்படத்தின் வாயிலாக இவர் அனைத்து மொழி திரைத்துறையிலும் புகழ் பெற்றார். பின்னர் 2017-ம் ஆண்டு குங் ஃஉ யோகா என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் ஜாக்கி ஜான் உடன் நடித்துள்ளார். தற்போது திஷா தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் கங்குவா என்ற படத்தில் நடித்துவருகிறார். திஷாபதானி தனது பிட்னெஸ் குறித்து பகிர்ந்துகொண்டவை:

ஒர்க்கவுட்: உடற்பயிற்சி மற்றும் யோகா எனது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே பார்க்கிறேன். தினசரி காலை, மாலை இருவேளையும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். காலையில் வாக்கிங், ஜாகிங் மற்றும் கார்டியோவில் கவனம் செலுத்துவேன். மாலையில் கிக் பாக்சிங், ஜிம்னாஸ்டிக்ஸ், நடனம், வெயிட் மேனேஜ்மெண்ட் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன். இதை தவிர, தினசரி அரைமணி நேரம், யோகா செய்ய தவறுவதில்லை. ஏனென்றால், யோகா உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வாழ்க்கையை மாற்றக்கூடியது என
நம்புகிறேன்.

டயட்: பலரும் உணவுப் பழக்கம் அழகை பாதிக்காது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவரின் அழகை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று உணவுமுறைதான். ஒருவர் உட்கொள்ளும் உணவுகள், பானங்கள்தான் அவரின் வெளிப்புறத் தோற்றத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உணவுப் பழக்கம்தான் ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் அழகை பராமரிக்க உதவுகிறது. அதனால், உடற்பயிற்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறேனோ அதே அளவிற்கு டயட்டிலும் கவனம் செலுத்துகிறேன். அந்தவகையில், எனது டயட் பிளான் என்பது கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் நிறைந்த கலவையாகும்.

காலை உடற்பயிற்சிக்குப் பின் காலை உணவாக முட்டை மற்றும் டோஸ்ட் அல்லது பனீர் மற்றும் பால் ஆகியவற்றை எடுத்துக் கொள்வேன். மதிய உணவில் – அரிசி சாதம் கொஞ்சம், சிக்கன் கொஞ்சம் கட்டாயம் இருக்கும். மாலை நேரத்தில், சிறிதளவு ஊறவைத்த பாதாம், வேர்க்கடலை அல்லது முளைக்கட்டிய தானியங்கள் எடுத்துக்கொள்வேன். இரவு உணவில் பிரவுன் அரிசி மற்றும் பருப்பு அல்லது சூப்புடன் (soup) முட்டை இருக்கும்.

இனிப்பு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேசமயம், இனிப்புகளை உட்கொண்ட பிறகு கலோரிகளை எரிக்க அதற்கான உடற்பயிற்சிகளை செய்துவிடுவேன். ஜங்க் ஃபுட்ஸ் எப்போதும் எடுத்துக் கொள்ள மாட்டேன். சிற்றுண்டியாக பழங்கள் மற்றும் நட்ஸ்களை எடுத்துக் கொள்வேன். ஏனனில் புரதங்களும் மற்றும் விட்டமின்களும் சருமத்தை அழகாக மாற்றும். அதுபோன்று, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற ஒருவர் நிறைய கீரைகள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பியூட்டி: எனது சருமப் பராமரிப்புக்கு 2 முக்கிய விஷயங்களைப் பின்பற்றுகிறேன். அதாவது, சருமத்துக்குத் தேவையான நீரேற்றத்தைக் (Cleanse and Hydrate) கொடுக்க நிறைய தண்ணீர் அருந்துவேன் மற்றும் ஆரோக்கியமாக இருக்க உடலுக்குத் தொடர்ந்து வேலை தருகிறேன். மற்றபடி அழகு ரகசியம் என்றால், தினசரி காலை எழுந்தவுடன் ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்த பிறகு, ரோஸ் வாட்டரை முகத்தில் அப்ளை செய்து கொள்வேன். இந்த வழக்கம் காலையில் எனது முகத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. இதுவே எனது சருமத்தை பொலிவாக வைக்கவும் உதவுகிறது என நினைக்கிறேன்.

அதுபோன்று, தினசரி க்ளென்சிங், டோனிங் மற்றும் மாய்ஸ்சரைசிங் (சிடிஎம்) வழக்கத்தை கடைப்பிடித்து வருகிறேன். மேலும், சன் ஸ்கீரின் பயன்படுத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கிறேன். அவசியமற்றபோது மேக்கப் செய்துகொள்வதில்லை. ஏனெனில் அது சருமத் துளைகளை அடைத்துவிடும் என்பதால். இது நாளடைவில் சருமத்தின் பொலிவை கெடுத்துவிடும். எனவே, சூட்டிங்கின் போது மட்டுமே மேக்கப் செய்தவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

அதுபோன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் உள்ள மேக்கப்பின் கடைசிப் புள்ளியைக்கூட அகற்றிவிடுவேன். ஏனென்றால் முகத்தில் எஞ்சியிருக்கும் ஒப்பனை சருமத்துக்கு நிரந்தரமான சேதத்தை ஏற்படுத்தக்கூடும். என்னதான் அழகு சாதனப்பொருள்களை பயன்படுத்தி அழகு செய்துகொண்டாலும், ஒரு அழகான புன்னகையே முகத்துக்கு இயற்கையான அழகையும், பிரகாசத்தையும் கொடுக்கிறது என நம்புகிறேன்.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post திஷா பதானி ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்! appeared first on Dinakaran.

Tags : Disha ,Dr. ,Kumkum ,Disha Patani ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!