×

தொடரும் கனமழையால் வேகமாக நிரம்பி வரும் முல்லைப்பெரியாறு அணை; கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம்: தொடரும் கனமழையால் முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணைக்கு சராசரியாக 12,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருகிறது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. 138 அடியை எட்டியுள்ளதால் தமிழக பொதுப்பணித்துறையினர் கேரள இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நாளை காலை 10 மணியளவில் தண்ணீர் திறக்க இடுக்கி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்த நீர்வரத்து அதிகரித்தால் அணையில் 142 அடி வரை தண்ணீரை சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 142 அடி வரை தண்ணீரை தேக்கிய பின் அணைக்கு வரும் நீரை தமிழகத்திற்கு 2 ஆயிரம் கனஅடி வரை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, வள்ளக்கடவு, வண்டிப்பெரியாறு, தப்பாட்டு, இடுக்கி போன்ற இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The post தொடரும் கனமழையால் வேகமாக நிரம்பி வரும் முல்லைப்பெரியாறு அணை; கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Mullaiperiyaru Dam ,Kerala ,Thiruvananthapuram ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...