×

இந்திய ராணுவத்தின் எதிர் தாக்குதலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மறக்கமாட்டார்: முன்னாள் ராணுவ தளபதி புத்தகத்தில் பரபரப்பு

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் எதிர் தாக்குதலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மறக்கமாட்டார் என்று முன்னாள் ராணுவ தளபதி தனது சுயசரிதை புத்தகத்தில் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே எழுதிய தனது சுயசரிதை புத்தகத்தில், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், அந்த புத்தகத்தில் கூறியிருப்பதாவது: சீனாவைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய ராணுவத்தின் பலமான எதிர் தாக்குதலை எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி (கல்வான் தாக்குதல்) நடந்தது.

இந்திய ராணுவத்தின் எதிர் தாக்குதலை, சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் மறக்க முடியாது. அதுவே அவர்களுக்கு போதும்! சீனா தனது அண்டை நாடுகளை மிரட்டுவதற்காக எல்லைகளை ஆக்கிரமிக்கும் தந்திரத்தை கடைபிடிக்கும். ஆத்திரமூட்டும் ெசயல்களை செய்தது. இதன் காரணமாக இந்திய ராணுவம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், எனது வாழ்நாளில் மிகவும் சோகமான நாட்களில் ஒன்றாகும். இவ்வாறு அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதியான நரவனே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி முதல் 2022ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை இந்திய ராணுவத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்திய ராணுவத்தின் எதிர் தாக்குதலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மறக்கமாட்டார்: முன்னாள் ராணுவ தளபதி புத்தகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : President ,Xi Jinping ,Indian Army ,New Delhi ,
× RELATED பொது மேடைகளில் தொடர்ந்து தடுமாறும்...