×

மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் பரிதவிப்பு..!!

தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் பரிதவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளம் மூழ்கியதால் நேற்று இரவு 9.20 மணி முதல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. தண்டவாளம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ரயிலில் இருந்து வெளியே இறங்க முடியாமல் பயணிகள் பரிதவிப்பு. ரயில் பயணிகள் உதவி கோரியுள்ள நிலையில் பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயில் நடுவழியில் நிற்பதால் 1,000 பயணிகள் பரிதவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Centur Express ,Srivaikunda ,Thoothukudi ,Senthur Express ,Srivaikundam ,
× RELATED தூத்துக்குடியில் மீனவரை கத்தியால் குத்தியவர் கைது