×

தென் மாவட்டங்களில் தொடர் மழை: நெல்லை, குமரி ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சென்னை: நெல்லை-செங்கோட்டை, நெல்லை-நாகர்கோவில் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோல் நெல்லை, குமரி ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொது போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒருசில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,

நெல்லை-செங்கோட்டை, நெல்லை-நாகர்கோவில் ரயில் ரத்து:

* நெல்லை – செங்கோட்டை, நெல்லை – நாகர்கோவில் இருமார்க்கத்திலும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் ரத்து.

* வாஞ்சி -மணியாச்சி – திருச்செந்தூர், செங்கோட்டை – நெல்லை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று ரத்து.

* நெல்லையில் இருந்து காஷ்மீர் செல்லும் விரைவு ரயிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

* நெல்லை -பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ், குமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை, குமரி ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கம்:

* கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரயில் மதுரை வரை இயக்கப்படும்.

* கன்னியாகுமரில் இருந்து சென்னைக்கு இன்றிரவு புறப்படும் அதிவிரைவு ரயில் மதுரையில் இருந்து இயக்கப்படும்.

* நாகர்கோவில் -தாம்பரம் அதிவிரைவு ரயிலும் மதுரையில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* நாகர்கோவில் -பெங்களூரு விரைவு ரயில் மதுரையில் இருந்து புறப்படும்.

* நெல்லை – மும்பை இடையே தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

* தூத்துக்குடி-மைசூர், திருச்செந்தூர்-மைசூர், நெல்லை-சென்னை எழும்பூர் ரயில்கள் மதுரையில் இருந்து புறப்படும்.

* தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்படும் அதிவிரைவு ரயிலும் மதுரையில் இருந்து புறப்படும்.

* நாகர்கோவில் கோவை விரைவு ரயில் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.

* கோவை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

* ஜாம் நகரில் இருந்து நெல்லை வரும் ரயில் திருவனந்தபுரத்தில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மழை வெள்ள பாதிப்பு – நாளை 3 ரயில்கள் ரத்து:

தென் மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக நாளை 3 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* ஜோலார்பேட்டையில் இருந்து நாளை காலை 5.15 மணிக்கு ஈரோடு செல்லும் ரயில் (06845) ரத்து.

* கோவையில் இருந்து நாளை காலை 8 மணிக்கு நாகர்கோவில் செல்லும் ரயில் (16322) ரத்து.

* ஈரோட்டில் இருந்து நாளை மாலை 4.35 மணிக்கு திருச்சி செல்லும் ரயில் (06612) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தென் மாவட்டங்களில் தொடர் மழை: நெல்லை, குமரி ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கம்…தெற்கு ரயில்வே அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madura ,Southern Railway ,Chennai ,Nellai-Senkot, Nellai-Nagargo ,Nella ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...