×

தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரித்த வெள்ளம்!: கனமழையால் அடித்து செல்லப்பட்ட ஜல்லிக்கற்கள்.. அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்..!!

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக செய்துங்கநல்லூர் அருகே ரயில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். தாமிரபரணி ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடிக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மேம்பாலத்தில் தின்று பார்த்த மக்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனிடையே, தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக செய்துங்கநல்லூர் அருகே ரயில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே சாதான்குளம் என்ற பகுதியில் பாலம் போன்ற அமைப்புடன் கூடிய ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இது கரையையொட்டியவாறு உள்ளது. இந்த தண்டவாளத்திற்கு அடியில் மண் தார் போடப்பட்டு, அதற்கு மேல் ஜல்லிக்கற்கள் போடப்பட்டிருக்கின்றன.

இதனிடையே 2 நாட்கள் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மணல் அரிப்பு ஏற்பட்டு ஜல்லிக்கற்கள்வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் எந்தவித பிடிப்பும் இன்றி தண்டவாளமானது அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. இதன் காரணமாக நெல்லை – திருச்செந்தூர் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தண்டவாளம் சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாமிரபரணி ஆற்றில் ஆர்ப்பரித்த வெள்ளம்!: கனமழையால் அடித்து செல்லப்பட்ட ஜல்லிக்கற்கள்.. அந்தரத்தில் தொங்கும் தண்டவாளம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,Thoothukudi ,Karinganallur ,Dinakaran ,
× RELATED அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு