×

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. அக்.1-ம் தேதி முதல் இன்று வரை இயல்பாக 418.7 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 440.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வடகிழக்கு பருவமழை 43 சதவீதம் கூடுதலாக பெய்ததாக தகவல் தெரிவிக்கபட்டிருந்தது. அக்டோபர்.1 முதல் இன்று வரை இயல்பாக 759.6 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டிய நிலையில் 1088.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு வரை மொத்தமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 5 சதவீதம் குறைவாகவே பெய்திருந்து. இந்நிலையில், வளிமண்டல சுழற்றி காரணமக தென் மாவட்டங்களில் நேற்று முதல் பெருமழை வெளுத்து வருகிறது. இதன் காரணமாக வரலாறு காணாத அளவில் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அளவு 5 சதவீதம் கூடுதலாக பதிவானது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 135 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 103 சதவீதம்கூடுதலாக வடகிழக்கு பருவமழை பதிவானது. தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 80 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை 68 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சமவெளி பகுதியில் 24 மணி நேரத்தில் 95 செ.மீ மழை கொட்டியது இதுவே முதல்முறை என வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். வரலாறி காணாத இந்த மழையால் நெல்லை, தூத்துக்குடு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை 5 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Chennai ,Northeastern ,Weather Centre Information ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை...